Advertisement

சிறப்புச்செய்திகள்

'மருதநாயகம்' படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை | பிளாஷ்பேக் : ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடையும் முன் சவுந்தர்யா செய்த காரியம் | பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார் | நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த் | பிக்பாஸ் ஷிவினா இது? - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம் | ராஜா ஸாப் படப்பிடிப்பில் பிரபாஸுடன் இணைந்த நிதி அகர்வால் | டீப் பேக் வீடியோ மூலம் பிரச்சாரம் : காங்கிரஸுக்கு எதிராக புகார் அளித்த அமீர்கான் | கன்னட தயாரிப்பாளர் துவாரகீஷ் மரணம் : ரஜினிகாந்த் இரங்கல் | கோட் படத்தில் விஜயகாந்த் : பிரேமலதா தந்த அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம்

04 டிச, 2023 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-film-is-made-in-the-background-of-gambling

கடந்த 2018ல் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தை இயக்கியவர் ஆறுமுக குமார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் 5 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே இந்த படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பிய இயக்குநர் ஆறுமுக குமார் இந்த படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மலேசியாவில் சூதாட்டம் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான வடிவங்களில் சூதாட்டம் இருக்கிறது. அதை மையமாக வைத்து உருவாகும் பகை, மோசடி, கடன் மற்றும் இது தொடர்பான குற்றங்களின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரமே சற்று மர்மமானது தான். இதில் அவர் சில வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

அவருடன் படத்தில் 90% கூடவே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படத்தின் கதையே யோகிபாபுவை சந்திப்பதற்காக விஜய்சேதுபதி மலேசியா கிளம்பி செல்கிறார் என்பதாகத்தான் ஆரம்பிக்கிறது. படத்தின் 70 நாட்கள் படப்பிடிப்பில் 53 நாட்கள் யோகிபாபு கலந்து கொண்டு நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன்18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் ... அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in