Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா... : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால் | 'மருதநாயகம்' படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை | பிளாஷ்பேக் : ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடையும் முன் சவுந்தர்யா செய்த காரியம் | பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார் | நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த் | பிக்பாஸ் ஷிவினா இது? - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம் | ராஜா ஸாப் படப்பிடிப்பில் பிரபாஸுடன் இணைந்த நிதி அகர்வால் | டீப் பேக் வீடியோ மூலம் பிரச்சாரம் : காங்கிரஸுக்கு எதிராக புகார் அளித்த அமீர்கான் | கன்னட தயாரிப்பாளர் துவாரகீஷ் மரணம் : ரஜினிகாந்த் இரங்கல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி

04 டிச, 2023 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Nani-expresses-regret-over-Vijay-Devarakonda---Rashmika-photos

தெலுங்கு நடிகரான நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹாய் நான்னா. வரும் டிசம்பர் 7ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் எதிர்பாராத விதமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது தனித்தனியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒளிபரப்பாகின. இது படக்குழுவினரை மட்டுமல்ல வந்திருந்த பார்வையாளர்களையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

இத்தனைக்கும் இந்த இருவரும் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கூட கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை. இவர்களது புகைப்படங்களை தேவையில்லாமல் யார் ஒளிபரப்பினார்கள் என்கிற விசாரணை இப்போது வரை போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நானி இதுகுறித்து கூறும்போது, “இப்படி இவர்களது புகைப்படங்கள் ஒளிபரப்பாகும் என்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. எனக்கே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. இதனால் யாருக்காவது பாதிப்போ சங்கடமோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஹாய் நான்னா படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியை தவிர தனிப்பட்டவர்களின் விஷயங்களையோ சர்ச்சைகளையோ குறித்து பேசும் நிகழ்ச்சி அல்ல” என்றும் கூறியுள்ளார் நானி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷாஅனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு ... 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in