Advertisement

சிறப்புச்செய்திகள்

கபீர் சிங் படத்தில் நடித்தது நான் செய்த இமாலய தவறு ; பாலிவுட் நடிகர் விரக்தி | நிவின்பாலி பட புரமோஷனுக்காக வெளியான 'உலக மலையாளி ஆந்தம்' | விஜய் அரசியலுக்கு வந்ததால் என் கனவு நொறுங்கியது ; விஷால் வருத்தம் | பிரபல மலையாள இயக்குனர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான நகை கொள்ளை | கதாநாயகிகளே இல்லாமல் படம் இயக்குவது ஏன் ? பஹத் பாசில் பட இயக்குனர் விளக்கம் | 150 கோடி வசூலைக் கடந்த 'ஆடுஜீவிதம்' | திருமண நாளில் செல்பி பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | ‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

01 டிச, 2023 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Bangalore-Days-Bike-Race-Scene-:-Interesting-information-by-Anjali-Menon

கடந்த 2014ல் மலையாளத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகி வெற்றியை பெற்ற படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் இந்தப்படத்தை இயக்கினார். இந்த படம் பின்னர் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் துல்கர் சல்மான் ஒரு பைக் ரேஸராக நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் துல்கர் பங்குபெறும் ஒரு பைக் ரேஸ் காட்சி இடம் பெற்றிருந்தது. படத்தில் இந்த காட்சி மிகவும் விறுவிறுப்பாக காட்டப்பட்டிருந்தது.

இந்தப்படம் வெளியாகி 10 வருடம் ஆகும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த பைக் ரேஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் அஞ்சலி மேனன்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புனேயில் நடைபெறும் இந்த சகதி பைக் ரேஸ் காட்சி போன்று கேரளாவில் செட் போட்டு எடுப்பதற்கு எங்களுக்கு பட்ஜெட் ஒத்துழைக்கவில்லை. அதனால் நாங்கள் நேரடியாக புனே சென்று பைக் ரேஸ் காட்சிகளை படமாக்க அனுமதி கேட்டோம். குறிப்பாக அப்போதைய நேஷனல் சாம்பியன் ஆக இருந்த கேபி அரவிந்த் என்பவரிடமும் இது குறித்து பேசினோம். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்டார். அன்றைய தினம் அவர் இரண்டு பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. முதல் பந்தயத்தில் அவர் தோற்றுவிட்டார்.

அந்த சமயத்தில் அடுத்த பைக் ரேஸ் காட்சிகளை படமாக்க முயற்சித்த எங்களது ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழுவினரை வெளியேறுமாறு நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது ரேஸில் கேபி அரவிந்த் வெற்றி பெற்றார். அந்த உற்சாகத்தில், அவர் தான் வென்ற மற்றும் தோற்ற இரண்டு பந்தயங்களின் வீடியோ காட்சிகளையும் எங்களிடம் கொடுத்து அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அதன்பிறகு எங்களது கலை இயக்குனர்களை வைத்து துல்கர் சல்மான் பைக் ஓட்டுவது போன்று தத்ரூபமாக சில காட்சிகளை வடிவமைத்து நிஜமான பந்தய காட்சிகளுடன் இணைத்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்புபிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ... மம்முட்டி படத்தை பாராட்டுபவர்கள் என் படம் மீது கல் எறிந்தார்கள் : இயக்குனர் வேதனை மம்முட்டி படத்தை பாராட்டுபவர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in