படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
ஞானவேல் இயக்கும் தனது 170 -வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில செய்திகள் அவ்வப்போது வெளிவந்தாலும் அதை இதுவரை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தவில்லை. இப்போதுதான் அவர் ரஜினி படத்திற்காக கதை எழுதும் பணியை தொடங்கி இருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ரஜினி 171வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்தார் லோகேஷ்.
இப்படியான நிலையில் தற்போது ரஜினி 171-வது படத்தில் மம்மூட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ரஜினியும் - மம்மூட்டியும் இணைந்து நடித்த தளபதி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டணிக்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் தற்போது இந்த தகவல் குறித்து மம்மூட்டியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரஜினி 171-வது படத்தில் நடிப்பது குறித்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ரஜினி படத்தில் என்ன நடிப்பதற்கு தொடர்பு கொண்டால் கண்டிப்பாக நடிப்பேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் மம்மூட்டி.