Advertisement

சிறப்புச்செய்திகள்

படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசையமைப்பாளர் தினாவே வழிவிடு : இளையராஜா வேண்டுகோள்

21 நவ, 2023 - 18:28 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-Request-to-Dhina

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா உள்ளார். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் வரவுள்ளது. இதில் மூன்றாவது முறையாக தினா போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தினாவிற்கு இளையராஜா பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அதில், ‛‛இந்த சங்கத்தை ஆரம்பித்தது எம்பி சீனிவாசன். முதன்முறையாக திரைத்துறையில் ஆரம்பித்த சங்கம் இது. இதனை இந்தியா அளவில் ஆரம்பித்தார். இந்த சங்கத்தில் இரண்டு முறை ஒருவர் தலைவராக இருக்கலாம் என்ற வரைமுறை உள்ளது. நீ ஏற்கனவே இருமுறை தலைவராக இருந்துள்ளாய். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா என பலரும் கூறுகிறார்கள்.

அதோடு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்கிறார்கள். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வைக்க கூடிய வேண்டுகோளை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. அதனால் இந்த கோரிக்கையை வைக்கிறேன். நீ நல்லது செய்வது வேறு விஷயம். ஆனால் இரண்டு முறை நீ தலைவராக இருந்து சங்கத்திற்கு நல்லது செய்துவிட்டாய் என்ற மன நிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்'' என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினா விளக்கம்
இதுபற்றி தினாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். விரைவில் தேர்தல் நடக்கும். 1960களில் எம்பி சீனிவாசன் போட்ட உத்தரவு என்று அண்ணன் இளையராஜா சொல்கிறார். சங்க விதிமுறைகள் காலத்திற்கு ஏற்றபடி அவ்வப்போது மாறும். நாங்களும் சங்க விதிமுறைகளை மாற்றி உள்ளோம். அதன்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் சிலர் தவறாக கூறி உள்ளனர். நான் அவரிடம் நேரடியாக சென்று பேசி இதுபற்றி புரிய வைக்க உள்ளேன்'' என்றார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பார்க்கிங் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்பார்க்கிங் படத்திற்கு தணிக்கை குழு ... ரஜினி 171வது படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா? ரஜினி 171வது படத்தில் மம்மூட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

morlot - Paris,பிரான்ஸ்
21 நவ, 2023 - 23:41 Report Abuse
morlot Dina is a bjp also no job at all for composing song . He is an arrogant person.So it is better to give this post an young talented person.Probably raja wants this post for his son karthik raja who is also without any job.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
22 நவ, 2023 - 21:47Report Abuse
வாய்மையே வெல்லும்சர்ச்சுல பாதிரியார்களும் வேலையில்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சோறு போட இருக்கவே இருக்கு வெளிநாட்டு பணம் என கூறினால் சரியாக இருக்கும் .....
Rate this:
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
21 நவ, 2023 - 21:33 Report Abuse
Anantharaman Srinivasan உண்ட. சுகமும் பதவி சுகமும் அடங்காது. தோற்கடிக்கப்பபட வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in