Advertisement

சிறப்புச்செய்திகள்

அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி | கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ | 17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம் | முனியாண்டியின் முனி பாய்ச்சல் | ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ?

27 செப், 2023 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Follow-up-to-the-cancellation-of-Leo-festival:-Internal-or-political?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'லியோ' படத்தின் இசை வெளியீடு செப்., 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென விழாவை ரத்து செய்தனர்.

போலி டிக்கெட்டுகள் விற்பனை, விஜய் மக்கள் இயக்கத்திற்காக அதிக டிக்கெட்டுகள் தேவை, இட நெருக்கடி, பாதுகாப்பு காரணங்கள், ஏஆர் ரஹ்மான் நடத்திய நிகழ்ச்சியின் தோல்வி என பல காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் சிலர் அரசியல் காரணமாக விழா ரத்தானது என்றும் பேசி வருகிறார்கள். படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சில ஏரியாக்களில் வினியோகிக்கக் கேட்டதாகவும் அதைத் தர தயாரிப்பாளர் மறுத்ததாகவும் எனவேதான் விழாவுக்கு அனுமதி தரவில்லை என்றும் சிலர் அரசியல் நெருக்கடி என காரணம் சொல்கிறார்கள். இது அரசியல் குத்து.

அதே சமயம், உள் குத்து ஒன்று இருக்கிறதென்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'லியோ' படத்தை 'எல்சியு' ஆக எடுக்க லோகேஷ் முயற்சித்தாராம். அதைப் பற்றித் தெரிய வந்ததும் இது தன்னுடைய படம் இதில் வேறு எந்த நடிகருக்கும் இடமில்லை என விஜய் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதனால் லோகேஷ் மிகவும் வருத்தப்பட்டாராம். அதன்பின் படத்தின் சில காட்சிகளை விஜய் மாற்றச் சொன்னதும் அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்தாராம். இதனால், படத்திற்கு வசனம் எழுதிய ரத்னகுமாரை வைத்து பல காட்சிகளை எடுத்தார்களாம்.

மேலும், 'லியோ' படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினிகாந்த்தின் 171வது படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதாலும் லோகேஷ் மீது கடுப்பில் உள்ளாராம் விஜய். இருவருக்குமான நெருக்கம் நிறையவே குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். 'லியோ' இசை வெளியீடு ரத்து குறித்து லோகேஷ் இதுவரையிலும் டுவிட்டர் தளத்தில் எந்தப் பதிவையும் பதிவிடாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் கோலிவுட்டில்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார்ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

angbu ganesh - chennai,இந்தியா
28 செப், 2023 - 09:56 Report Abuse
angbu ganesh ஆக 1000 கோடி வட போச்சே
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
28 செப், 2023 - 09:55 Report Abuse
angbu ganesh AAGA
Rate this:
Ajay - ,
28 செப், 2023 - 13:31Report Abuse
Ajay super stores...
Rate this:
28 செப், 2023 - 09:12 Report Abuse
லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் கதை இதுதான் ..படம் காஷ்மீரில் ஆரம்பம் ஆகிறது. காஷ்மீரில் லியோ சாக்லேட் கம்பெனி என்னும் ஒரு சாக்லேட் ஃபேக்டரி நடத்தி கொண்டு வருகிறார் தளபதி விஜய். நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக சாக்லேட் வழங்குவதாக அறிவிப்பு பலகை ஊரெங்கும் வைத்து இருக்கிறார்கள். அதை கண்டு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியில் விஜய் நடத்தும் சாக்லேட் ஃபேக்டரியை நோக்கி துள்ளி குதித்து செல்கிறார்கள். சாக்லேட் ஃபேக்டரியை சூழ்ந்தபடி குழந்தைகள் அனைவரும் விஜய்க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது பிக்பாஸ் அசல் கோலார் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "அண்ணா குழந்தைகள் எல்லாரும் காத்துக் கொண்டு இருக்கிறாங்க சீக்கிரம் வானா வானா வானா" என்று அழைக்கிறார் அப்போது விஜய் "நா ரெடி தான் வரவா" என்ற பாடலை பாடிய படியே வருகிறார் அது தான் தளபதி விஜய்யின் அறிமுக காட்சி..... பாடல் ஒலித்துக் கொண்டு இருக்க அப்போது கூட்டத்தில் ஒரு குழந்தையின் பெற்றோர் தலையில் அடித்தபடி "என்ன கன்றாவி பாட்டு இது குழந்தைகளுக்கான பாடல் மாதிரியே தெரியவில்லையே என்று புலம்புகிறார்.. பாடல் முடிந்து தளபதி விஜய் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக சாக்லேட் வழங்குகிறார். சில குழந்தைகள் விஜய் கன்னத்தில் அன்புடன் முத்தம் கொடுத்து விட்டு சாக்லேட்டை பெற்று மகிழ்ச்சியாக செல்கின்றனர். மறுநாள் பொதுமக்கள் பலர் திரண்டு லியோ சாக்லேட் ஃபேக்டரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர் ஏனெனில் லியோ சாக்லேட் உட்கொண்ட அனைத்து குழந்தைகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லியோ சாக்லேட் ஃபேக்டரியில் சோதனை செய்துவிட்டு அந்த சாக்லேட்டில் தலை முடி கலந்திருப்பதாக அறிவித்து ஃபேக்டரியை இழுத்து மூடி சீல் வைத்தனர். அதை கேட்டு குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து விஜய்யை அடிப்பின்னி பெடல் எடுத்தனர். காஷ்மீர் கடும் குளிரில் விஜய்யை ஜட்டியுடன் தரதரவென இழுத்து புரட்டி கொண்டு இருந்த வேளையில் போலிசார் விரைந்து பொதுமக்களிடமிருந்து விஜய்யை கைது செய்து அழைத்துச் சென்றனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி விஜய்யை பார்த்து உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்றீங்களா? என்றார் அதற்கு விஜய் அழுது கொண்டே தன் தலையில் அணிந்திருந்த விக்கை படக்குன்னு புடுங்கி "யுவர் ஹானர் என் தலையில் ஒரு முடி கூட இல்லையே அப்படி இருக்கும்போது நான் எப்படி சாக்லேட்டில் முடி கலந்திருப்பேன்" என்று கதையின் திருப்புமுனையாக ட்விஸ்ட்டுடன் நீதிபதியிடம் இந்த கேள்வியை முன்வைத்தார். இதைக் கண்டு நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதிர்ச்சியுடன் ஒரு இண்டெர்வெல்.............இண்டெர்வெல்...........இடைவேளைக்கு பிறகு நீதிபதி வழுக்கை தலையை கண்ட அதிர்ச்சியில் வழக்கை ஒத்தி வைத்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுவரை விஜய்யை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். விஜய்யை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் விஜய் தப்பித்து விடுகிறார். அந்த குழந்தைகளுக்கு நடந்த அநீதியை கண்டு பிடிக்க தானே செல்கிறார்.இப்போது தான் சஞ்சய் தத் மற்றும் அவரது தம்பி அர்ஜூன் படத்தில் அறிமுகம் ஆகிறார்கள். சஞ்சய் தத் நடத்தும் சாக்லேட் கம்பெனி வியாபாரம் லியோ சாக்லேட் கம்பெனியால் படுமோசமாக சென்றது அதனால் தான் சஞ்சய் தத் விஜய் மீது இப்படி பழி சுமத்தினார் இது சஞ்சய் தத் செய்த வேலை என்பதை விஜய் கண்டுபிடித்து மேலும் சாக்லேட்டில் போதை பொருள் கலந்து விற்பனை செய்ய படுவதையும் கண்டு பிடித்து அவர்களின் கூட்டத்தையும் கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வாதாடி வெற்றி பெறுகிறார். மீண்டும் லியோ சாக்லேட் கம்பெனியை திறக்க கோர்ட் உத்தரவிடுகிறது. சொட்டை தலையுடன் விஜய் ஆனந்த கண்ணீரில் திகைத்து நிற்கிறார். படம் முடிந்தது. நன்றி...🙏🙏
Rate this:
28 செப், 2023 - 11:08Report Abuse
முருகன் பிரபல நடிகரின் அடுத்த டைரக்டர் ரெடி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in