Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ?

27 செப், 2023 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Leo-Festival-Canceled:-Another-Forgetful-Heart-Averted?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்தது.

விஜய் ரசிகர்கள் பலரும் இந்த இசை விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர். 6000 பேர் வரையில் மட்டுமே அமரும் இட வசதி கொண்ட நேரு உள் விளையாட்டு அரங்க மைதானத்தில் அதை விட பல மடங்கு பேர் டிக்கெட்டுகளைக் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தையும், படக்குழுவினரையும் இடைவிடாமல் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. அதே சமயம், போலி டிக்கெட்டுகளையும் அச்சிட்டு சிலர் வினியோகித்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிந்துள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதை விடவும் மிக அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அதனால் கடும் நெருக்கடியும், சர்ச்சைகளும் எழுந்தது. போலி டிக்கெட்டுகள் மூலமும் பலரும் விழாவுக்கு போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியால் ஆஸ்கர் விருது வென்றவராக இருந்தாலும் ஏஆர் ரஹ்மானின் இமேஜ் ரசிகர்கள் மத்தியில் குறைந்தது. பலரும் அவரை நேரடியாகவே விமர்சித்தார்கள்.

அது போன்றதொரு சம்பவம் 'லியோ' இசை வெளியீட்டு விழாவில் நடந்துவிடக் கூடாதென முன்னெச்சரிக்கையாகவே ரத்து செய்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது படத்திற்கும், விஜய்யின் இமேஜுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தும். மேலும், 6000 பேர் அமர வேண்டிய இடத்தில் பல்லாயிரம் பேர் வந்துவிட்டால் அதைத் தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு வசதிகளைச் செய்ய முடியாது என்பதையும் யோசித்துள்ளார்களாம்.அதோடு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்லியிருக்கிறார். 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் 23400 டிக்கெட்டுகளைக் கேட்டிருக்கிறார்கள். 6000 பேர் அமர வேண்டிய அரங்கில் அவ்வளவு டிக்கெட்டுகளைக் கொடுப்பது எப்படி என்ற கேள்வி வந்துள்ளது. ஒரு தொகுதிக்கு 10 டிக்கெட்டுகள் மட்டுமே என தயாரிப்பாளர் கண்டிப்பு காட்டியிருக்கிறார். கொடுத்தால் அவ்வளவு டிக்கெட்டுகள்தான் கண்டிப்பாக வேண்டும் இல்லையென்றால் விழாவையே ரத்து செய்யுங்கள். தங்களால் சமாளிக்க முடியாது என ஆனந்த் கண்டிப்புடன் இருக்கிறார். தற்போது புஸ்ஸி ஆனந்த் சொல்வதை மட்டுமே கேட்டு செயல்படும் விஜய், அவர் சொல்வதைச் செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் ஆர்டர் போட்டாராம். வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்கள் என்றும் இன்னொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது.

இதனிடையே, பார்வையாளர்கள் யாரையும் விடாமல், டிவியில் நேரடி ஒளிபரப்பு மூலம் மூடப்பட்ட அரங்கில் விழாவை நடத்தலாமா என்ற ஒரு யோசனையும் உள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியும் இல்லையென்றால் அஜித் படங்களைப் போல எந்த ஒரு விழாவையும் நடத்தாமல் அப்படியே படத்தை வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம். விஜய் எதற்கு சரி என்கிறாரோ அதுதான் கடைசியாக நடக்கும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார்நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : ... ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

VENKATESAN - Singapore,சிங்கப்பூர்
28 செப், 2023 - 07:19 Report Abuse
VENKATESAN இந்த கதையை நம்ப விஜய் ரசிகர்கள் முட்டாள்களா என்ன?
Rate this:
27 செப், 2023 - 22:24 Report Abuse
மாடல் அரசு அதென்ன புஸ்ஸி ஆனந்த்?? busy ah அல்லது pussy ah???
Rate this:
Balaji - Chennai,இந்தியா
27 செப், 2023 - 17:29 Report Abuse
Balaji Nichchayamaaga dheemkaavinar edhaavadhu seidhiruppaargal.. Vijay and co eduththa nalla mudivu idhu..
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
27 செப், 2023 - 14:07 Report Abuse
angbu ganesh இன்னொரு ஜெயலலிதா சசிகலா (விஜய் புஸ்ஸி ஆனந்த்)
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
27 செப், 2023 - 14:06 Report Abuse
angbu ganesh INNORU
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in