ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வந்து சில மாதங்களானது. ஆனால், படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்காமல் இருந்தனர். அஜித்தும் பைக்கில் உலக சுற்றுப் பயணம் போக ஆரம்பித்தார்.
விஜய்யின் 'லியோ' படம் முடிந்து வெளியீட்டிற்குக் காத்திருக்கும் நிலையில் அவரது 68வது படமும் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 'வாரிசு, துணிவு' ஒரே நாளில் வெளியான நிலையில் விஜய் அடுத்தடுத்து போய்க் கொண்டேயிருக்க, அஜித் அப்படியே தேங்கிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் 'விடாமுயற்சி' குழுவினர் சில தினங்களுக்கு முன்பு துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கும் அபுதாபி உள்ளிட்ட இடங்களிலும் அக்டோபர் 4 முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு, அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அஜித் ஓரிரு நாட்களில் துபாய் கிளம்ப உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் சென்னையில் ஆரம்பமாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.