காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இப்படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென தள்ளி வைத்தனர்.
செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலருக்கு 'சந்திரமுகி 2' டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக இருந்தது. அந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல்தான் 'சந்திரமுகி 2' வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான விளக்கத்தை இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
“பட வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக டி.ஐ. செய்பவர்களிடமிருந்து திடீரென போன் வந்தது. படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என்றார்கள். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிஜி, டிஐ, கிராபிக்ஸ் என பல இடங்களில் அதைத் தேடினோம். 150 டெக்னீஷியன்கள் ஒரு எபிசோடுக்காக வேலை செய்தார்கள். எங்களுக்கு மிகவும் குழம்பிய நிலையில் நான்கைந்து நாட்களுக்குப் பிறகே எங்களுக்கு அந்தக் காட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை, எங்களுக்கும் அது ஆபத்தானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தைத் தள்ளி வைத்தோம்,” என்றார்.