கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' |
மலையாள ‛பிரேமம்' படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தமிழில் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. இதுதவிர தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் சாய் பல்லவி மாலையும், கழுத்தமாக இருக்கும் போட்டோ ஒன்றை சிலர் வெளியிட்டு இவர்கள் திருமணம் செய்துவிட்டதாக செய்தி பரப்பினர். உண்மையில் அந்த போட்டோ ‛சிவகார்த்திகேயன் 21' பட பூஜையின் போது எடுக்கப்பட்டது. அதை சிலர் இப்படி திரித்து செய்தியாக பரப்ப டென்ஷன் ஆகிவிட்டார் சாய்பல்லவி.
இதுபற்றி சாய்பல்லவி வெளியிட்ட கோபமான பதிவு : ‛‛உண்மையாகவே என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் குடும்பம் போன்று இருக்கும் நண்பர்களை பற்றி வதந்தி பரப்பும் போது அதை பேச வேண்டி உள்ளது. என் சினிமா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோவை வேண்டுமென்றே இதுபோன்று கிராப் செய்து பணத்திற்காக இப்படி ஒரு கேவலமான நோக்கத்தோடு பரப்பி வருகின்றனர். எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாக உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.