ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் | லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் |
வரும் அக்.,5ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான 'கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர்அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.