நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கும் கயல் சீரியல் நடிகை | நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து | ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் தான் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் அடுத்த வருட மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார் சாரா அலிகான் என்கிறார்கள்.