ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கடந்த ஆண்டில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. மேலும், இதில் தனுஷ், நித்யா மேனன் ஜோடியையும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் கிஷன் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் நித்யா மேனன் உள்ளது போல் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்தது. இதனால் ரசிகர்கள் மீண்டும் தனுஷ், நித்யா மேனன் ஜோடியாக நடிப்பதாக பகிர்ந்து வந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.