Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸைக் காப்பாற்றுமா 'சலார்' ?

29 ஆக, 2023 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Will-Salar-save-Prabhas?

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றார் பிரபாஸ். தெலுங்கு நடிகர்கள், ஏன், தென்னிந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

பிரபாஸின் ஒரே நம்பிக்கையாக 'சலார்' படம் மட்டுமே இருக்கிறது. 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் இப்படம் செப்டம்பர் மாதம் இன்னும் ஒரு மாத காலத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்து சில வெளிநாடுகளில் முன்பதிவு கூட ஆரம்பமாகிவிட்டது.

ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 3ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் சாதனைகளை இப்படத்தின் டிரைலர் நிச்சயம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

'பாகுபலி 2'க்குப் பிறகு வந்த படங்கள் பிரபாஸை ஏமாற்றிய நிலையில் 'சலார்' படமாவது காப்பாற்றுமா என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
என்ஐஏ விசாரணை வளையமா? - நடிகை வரலட்சுமி விளக்கம்என்ஐஏ விசாரணை வளையமா? - நடிகை ... கடைசி வரை நான் காமெடியன் தான் - யோகிபாபு கடைசி வரை நான் காமெடியன் தான் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KC Arun - Tirunelveli,இந்தியா
29 ஆக, 2023 - 17:35 Report Abuse
KC Arun வாய்ப்புகள் குறைவு. சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அவரிடம் அதிகமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையிலான கதைகளை அவர் தேர்வு செய்யாமல் அதிக பட்ஜெட் படங்களை தேர்வு செய்கிறார். ஒரு தடுமாற்றம் தான். ஒரு மாநில மொழிப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தவர், திடீரென பான் இந்தியா நடிகராகி விட்டார். அதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களை கவரும் வண்ணம் கதை வேண்டும். ஒரு மொழியில் மோசம் என சொல்லி விட்டால், மொத்தமும் போச்சு.. நல்ல பொதுவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த பின், அதிக பட்ஜெட் படங்களில் நடிக்க வேண்டும். இல்லையேல் நஷ்டம் மட்டுமே மிஞ்சும்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
29 ஆக, 2023 - 16:49 Report Abuse
angbu ganesh பாகுபலி இரண்டு பாகங்களும் ஓடியது ராஜமௌளியின் திறமையால் திரைகதையால், பிரபாஸுக்காக இல்ல தயவு செஞ்சு புருஞ்சிக்கங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in