Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினி படத்தில் இணையும் நாகார்ஜுனா! | உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பகீர் வீடியோ | போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் உருவாகும் கார்த்தியின் ‛சர்தார்- 2' | கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்! | 'கோட்' படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது! -வெங்கட் பிரபு தகவல் | சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம் | 'கில்லி' ரீரிலீஸ் - முதல் நாள் வசூல் 8 கோடி? | சூர்யா 44வது படத்தில் இணைந்த பிரபலங்கள்! | மும்பை செல்லும் குபேரா படக்குழு! | மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜோதிகா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜூஜூபி' பாடலிலும் வம்பிழுக்கிறாரா 'ஜெயிலர்'?

27 ஜூலை, 2023 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Is-Jailer-making-a-fuss-in-Jujubee-song?

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா', இரண்டாவது சிங்கிளான 'ஹூக்கும்' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிய நிலையில் நேற்று மூன்றாவது சிங்கிளான 'ஜூஜூபி' பாடல் வெளியானது.

இரண்டாவது பாடலான 'ஹூக்கும்' பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை விமர்சித்து அந்தப் பாடல் எழுதப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கோபமடைய சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்கள் ஆரம்பமானது.

ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் ஒரே நடிகர் விஜய், விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அடுத்து நேற்று வெளியான மூன்றாவது பாடலான 'ஜூஜூபி' பாடலில் இடம் பெற்றுள்ள “பகையாகிப் போனா பலியாவ வீணா”, “இவன் ரூட்டே வேறு,”, “கரண்ட்டுல கைய வச்சிபுட்ட, அது தொட்ட உடனே தூக்காமதான் விடுமா உன்னைய,”, “புலிக்கே பசிய தூண்டிபுட்டே அது ரத்தக்காவு வாங்காமத்தான் விடுமா உன்னைய,” ஆகிய வரிகள் யாரை “ஜூஜூபி” என நினைத்து எழுதப்பட்டது என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

இதனால், நாளை 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு 'பேபி' ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டிதெலுங்கு 'பேபி' ரீமேக் உரிமையை ... 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' டிரைலர் : அதிரடி காட்டும் சிரஞ்சீவி 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Maha - Singapore ,சிங்கப்பூர்
28 ஜூலை, 2023 - 06:54 Report Abuse
Maha Super hit....Waiting for fdfs...
Rate this:
28 ஜூலை, 2023 - 06:47 Report Abuse
G KARTHIKEYAN இவரு சன் டிவி தயாரிப்பின் கொத்தடிமை
Rate this:
KC Arun - Tirunelveli,இந்தியா
28 ஜூலை, 2023 - 11:30Report Abuse
KC Arunதவறு நண்பா.. அந்த நிர்வாகம் இவரை ஏமாற்றுகிறது. அவர்களின் தயாரிப்பில் இவர் நடித்த படம் ஓடவில்லை, வருமானமில்லை என கணக்கு காட்டுகிறது. நம்மால் நஷ்டப்பட்டார்களே என இவரும் நடித்துக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். புரிகிறதா? தன்னால் ஒருவர் நஷ்டப்படுகிறார் என்றால், இந்த மனிதரால் பொறுத்துக் கொள்ள இயலாது. உடனே ஈடுகட்ட நடித்து தருகிறேன் என சம்மதம் சொல்லி விடுகிறார். இந்த குணத்தை அவர்கள் லாபமாக்குகிறார்கள்....
Rate this:
28 ஜூலை, 2023 - 05:28 Report Abuse
V.Saminathan. இவ்வளவு பொறாமை ஒருத்தனோட ஒருத்தனுக்கிருக்கு-இந்த வள்ளல்ல இவனுக வந்து மக்களுக்கு நன்மை பண்றேங்கிறது நம்பும்படியாவ இருக்கு.
Rate this:
Saisenthil - Salem,இந்தியா
27 ஜூலை, 2023 - 20:42 Report Abuse
Saisenthil கர்நாடககாரன் என்றால் பல்லை காட்டி கொண்டு வாய்ப்பு தருவார். ஏமாற்று பேர்வழி, பணத்துக்காக எதையும் செய்வார்...
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
27 ஜூலை, 2023 - 17:01 Report Abuse
R S BALA பைத்தியக்காரனுங்க..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in