முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் 'ஜவான்' படத்தின் டிரைலர் சற்று முன் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.
தமிழில் வெளியான டிரைலரைப் பார்க்கும் போது ஹிந்திப் படம் ஒன்றைப் பார்க்கிறோம் என்றில்லாமல் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம் படத்தில் உள்ள தமிழ் நடிகர்கள், தமிழ் வசனங்கள்.
முழுக்க முழுக்க ஷாருக்கை மையப்படுத்திய டிரைலராக இருந்தாலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா ஆகியோர் ஒரு சில வினாடிகள் வந்து போகிறார்கள்.
“நான் புண்ணியமா, இல்ல பாவமா”, “ஹீரோவா, வில்லனா”, “நீங்கதான் நா…ரெடி”, “இது வெறும் ஆரம்பம்தான், இனிமேதான் ஆட்டமே”, “நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா, என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா,” என ஷாருக்கானின் வசனங்கள் விஜய், அஜித் பட வசனங்களைப் போல ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.
படத்தில் ஷாருக்கானே ஹீரோவாகவும், வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது. ஒரு சயின்டிபிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் இருக்கும் என டிரைலரைப் பார்க்கும் போது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
அனிருத்தின் பின்னணி இசை மட்டுமே டிரைலரில் உள்ளது. பாடல்களை டிரைலரில் சேர்க்காதது ஒரு குறை. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் என டெக்னிக்கலாகவும் டிரைலர் சிறப்பாகவே உள்ளது.
ஷாரூக்கான் கடைசியாக நடித்து வெளிவந்து ஆயிரம் கோடி வசூலை அள்ளிய 'பதான்' படத்தின் வசூலை இந்தப் படமும் தொடரும் என்று பாலிவுட் வட்டாரங்கள் டிரைலரைப் பார்த்ததும் பேச வாய்ப்பிருக்கிறது.