Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்?

03 ஜூலை, 2023 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Is-Sivakarthikeyan-aspiring-to-replace-Rajinikanth?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ரஜினிகாந்த் இப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு அவரை விட பல வயது குறைந்த நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் உயரத்தைத் தொட மற்ற நடிகர்கள் முயன்று வருகிறார்கள்.

அவர்களில் விஜய், அஜித் ஆகிய இருவருக்குத்தான் போட்டி அதிகமாக இருந்தது. அஜித் தனக்கென எந்த பட்டங்களையும் தற்போது வைத்துக் கொள்ளாத நிலையில் அவர் அந்த அடுத்த 'சூப்பர் ஸ்டார்' போட்டியில் அதிகம் பேசப்படாமல் இருந்தார். ஆனால், விஜய் நடித்து இந்த வருடம் வந்த 'வாரிசு' பட வெளியீட்டின் போதும் இந்த 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை எழுந்தது.


இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய படத்தில் நடித்துள்ள சீனியர் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். ஆனால், தன்னை அவருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என சிவகார்த்திகேயன் பதிலளித்துப் பேசியுள்ளார். 'மாவீரன்' என ரஜினிகாந்த் படத்தின் பெயரை தனது படத்திற்குப் பயன்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.


இருந்தாலும் நேற்றைய விழாவை நடத்திய விதமும், சிவகார்த்திகேயன் மேடையில் ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விதத்தையும் பார்த்த ரசிகர்கள் அவர் விஜய்யைப் போல செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் நடித்து படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எப்படி நடந்து கொண்டாரோ அதையே சிவகார்த்திகேயனும் பாலோ செய்கிறார் என்கிறார்கள்.

விஜய் அரசியலை நோக்கி தன்னுடைய பாதையைத் திருப்பியுள்ள இந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் பாதையில் பயணிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபுவாக நடித்தது எப்படி?: ஹன்சிகா விளக்கம்யோகிபாபுவாக நடித்தது எப்படி?: ... நடிகர் சார்லி நடிக்கும் 'பைண்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு நடிகர் சார்லி நடிக்கும் 'பைண்டர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

07 ஜூலை, 2023 - 09:04 Report Abuse
பேசும் தமிழன் தன்னை மலையுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறிய அந்த பெருந்தன்மை ....இவரை அவரது இடத்துக்கு உயர்த்தும்.
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
04 ஜூலை, 2023 - 11:18 Report Abuse
vira முதல்ல நடிக்க கத்துக்கோ
Rate this:
KC Arun - Tirunelveli,இந்தியா
03 ஜூலை, 2023 - 21:11 Report Abuse
KC Arun ரஜினி ரசிகனாக எனக்கு இது பெருமையே.. இப்போதுள்ள எந்த ஒரு நடிகரும் திரை உலகில் கொடிகட்டி பறந்த, வசூலில் சாதனை புரிந்த முன்னாள் தமிழ் நடிகர்களின் பட்டத்திற்கோ அல்லது இடத்திற்கோ ஆசைப்படாமல், ரஜினி அவர்களின் பட்டத்திற்கும், இடத்திற்கும் தான் ஆசைப்படுகிறார்கள் மற்றும் எனக்குத்தான் என நடிகர்களும் மற்றும் எங்கள் அபிமான நடிகருக்குத் தான் என ரசிகர்களும் பெருமையாக சொல்லும் போதும் அல்லது சண்டை போட்டுக் கொள்ளும் போதும், தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ரஜினி ரசிகனாக இருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வம் அதிகமாக உள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் எந்த ஒரு நடிகரின் ரசிகருக்கும் கிட்டாத பாக்கியம், எங்களுக்கு கிடைத்து உள்ளது. தனக்கென பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான்...பாடல் வாத்தியார் எதை மனதில் வைத்து பாடினாரோ எனக்கு தெரியாது... ஆனால் தலைவன் வழியில் தான் மற்றவர்கள் வருவார்கள். சாதாரணமானவர்கள் போகும் வழியில் யாரும் பின் செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் புரிகிறது. அப்படி என்றால் தலைவன் யார்? என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Rate this:
bala -  ( Posted via: Dinamalar Android App )
03 ஜூலை, 2023 - 18:41 Report Abuse
bala everyone wants to become Rajini because they think it is easy. why dont they try Kamalhassan ?. because they cant act and these actors dont have talent.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
03 ஜூலை, 2023 - 17:25 Report Abuse
Vijay போதும் உங்க ரஜினி புராணம். கமல் ஒரே ஒரு படத்தில் இறங்கி அடித்தார் மற்றும் அவரின் ரீ -ரிலீஸ் வேட்டையாடு விளையாடு வசூலில் அடித்து விளையாடுகிறது. ரஜினி இதனால் தலையை பிச்சி கொண்டு இருக்கிறார்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in