மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி |

ஹிந்தியில் கடந்த 2001ல் வெளியான படம் கடார் ; ஏக் பிரேம் கதா. சன்னி தியோல், அமிஷா பட்டேல் ஜோடியாக நடித்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‛கடார் 2' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. சன்னி தியோல், அமிஷா பட்டேல் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை, முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் அனில் சர்மாவே இயக்கியுள்ளார்.
அதே சமயம் இது ராணுவம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சமீபத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகளுக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு இந்த படம் வெளியிடுவதற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ராணுவ அதிகாரிகள் இந்த படம் குறித்து தங்கள் பாராட்டுகளையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.