Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முறியடிக்கப்படுமா '2.0' வசூல் சாதனை...?

30 மே, 2023 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Will-'2.0'-collection-record-be-broken...?

தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம்தான் முதலிடத்தில் உள்ளது. அப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். அந்தப் படத்தின் வசூல் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

கடந்த வருடம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் 500 கோடிக்கும் கூடுதலான வசூலுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து கடந்த மாதம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் பாகத்தின் வசூலையே முறியடிக்க முடியாமல் இரண்டாம் பாகத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சில பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த வசூலை வேறு எந்தப் படமும் முறியடிக்கக் கூடாது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் பேராசையாக இருக்கும். கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் தமிழக வசூலில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்த் அவர் நடித்து அடுத்தடுத்து வெளிவரும் படங்களின் மூலம் முறியடிப்பார் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு '2.0' படத்தின் வசூல் முறியடிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

அதை ரஜினிகாந்த்தே அவருடைய அடுத்தடுத்த படங்களில் முறியடிப்பாரா, அல்லது '2.0' படத்தை இயக்கிய ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும 'இந்தியன் 2' படம் முறியடிக்குமா, அல்லது வேறு படங்கள் முறியடிக்குமா என்பதற்கு சற்றே பொறுமை காக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சமுத்திரக்கனியின் 'ப்ரோ' - பவன் கல்யாணின் ஷு-வை விமர்சிக்கும் ரசிகர்கள்சமுத்திரக்கனியின் 'ப்ரோ' - பவன் ... 28 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vijay - Chennai,இந்தியா
30 மே, 2023 - 17:29 Report Abuse
Vijay வசூல் முக்கியமா அல்லது லாபம் முக்கியமா. போதும் உங்க ரஜினி புராணம்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
31 மே, 2023 - 09:53Report Abuse
angbu ganeshஉன் பேர் விஜயா அதான் இவ்ளோ பொங்கற...
Rate this:
marimuthu - coimbatore,இந்தியா
30 மே, 2023 - 16:24 Report Abuse
marimuthu இந்தியன்-இரண்டாம் பாகம் கண்டிப்பாக முறியடிக்கும்
Rate this:
Jadee Manohar - Chennsi,இந்தியா
30 மே, 2023 - 16:03 Report Abuse
Jadee Manohar இப்படி மூட்டி விட்டு ரசிகர்களுக்கு இடையே விரோதம் உருவாக்குவது எவ்வளவு பெரிய தவறு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in