தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு |
புனிதமான கோயில்களுக்குள் இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளை தவிர்த்து மேற்கத்திய உடைகளை அணிந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்குள் மேற்கத்திய உடைகள் அணிந்து வர தடை செய்து கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நிற்கும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து சென்றேன். என்னை வளாகத்துக்குள்கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஒட்டலுக்கு சென்று உடைகளை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் உடைகளை அணிந்து இன்று சர்வசாதரணமாக கோயிலுக்கு செல்கிறார்கள். கோயில்களுக்குள் இரவு உடைகளை அணியும் இந்த கோமாளிகள், சோம்பேறிகள், கோயிலுக்குள் மேற்கத்திய உடை அணிந்து வரும் இதுபோன்ற முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.