நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
கிரிக்கெட்டையும், சினிமாவையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை மணப்பது, கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சினிமா ஆவது. கிரிக்கெட் புரமோசனுக்கு சினிமா பயன்படுவது இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. தற்போது நடந்து வரும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா நடனம் ஆடினார்கள்.
இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்பாக கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான பாடகி ஜொனிதா காந்தி, பாப் பாடகர் டிவைன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
ஜொனிதா காந்தி ‛சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற பாலிவுட் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா... செல்லம்மா, காற்று வெளியிடை படத்தில் இடம்பெற்ற அழகியே, ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மெண்டல் மனதில் உள்பட பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.