தங்கலான் - ஒரு மாதத்திற்குப் பிறகு வரும் விக்ரம் | தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை |
'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' படங்களில் நடித்த துஷாரா விஜயன் தற்போது நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இந்த படத்தில் அவரது நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. படத்தில் நடித்தது பற்றி துஷாரா விஜயன் கூறியதாவது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அருள்நிதி படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதிக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கவுதம் ராஜ் கொடுத்துள்ளார்”. என்றார்.