தங்கலான் - ஒரு மாதத்திற்குப் பிறகு வரும் விக்ரம் | தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை |
நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பில் பிஸியாக இருக்கும் ராம்சரண் அடுத்தப்படியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளார். ராம் சரண் அவரது நண்பர் யு.வி கிரியேஷன்ஸ் விக்ரம் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் துவங்குகிறார். இந்த நிறுவனத்திற்கு வி மெகா பிக்சர்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் அகில் அக்கினேனி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ராம்சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி சொந்தமாக கொனிடேலா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.