நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
சின்னத்திரை பிரபலங்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் மாறி மாறி சோஷியல் மீடியாவில் குறை சொல்லி வருகின்றனர். அதற்கேற்றார் போல் நெட்டிசன்களில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கும் ஆதரவாக நிலைபாடு எடுத்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்யுக்தா தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால், இன்று தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள். என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!' என்று கூறியுள்ளார்.