Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 68 அறிவிப்பு : மறைமுகமாக விமர்சித்தாரா 'லியோ' தயாரிப்பாளர் ?

25 மே, 2023 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-68-announcement:-'Leo'-producer-indirectly-criticized?

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 'விஜய் 68' படத்தின் அறிவிப்பு திடீரென வெளியானது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைதற்கு முன்பே வந்த அந்த அறிவிப்பு பற்றி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும், 'லியோ' ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அவரது 'லியோ' படத்தை அறிவித்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

“'வாரிசு' படத்தை நான்தான் ரிலீஸ் பண்ணேன். அதுக்கு முன்னாடியே நாங்க பூஜை போட்டு முடிச்சிட்டோம். டிசம்பர் 5 பூஜை போட்டோம். ஜனவரி 2 ஷுட்டிங் ஆரம்பிச்சிட்டோம். முதல் கட்ட படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம். அதுக்கப்புறம்தான் 'வாரிசு' ரிலீஸ் ஆச்சி. 'வாரிசு' ரிலீஸ் ஆகற வரைக்கும் நாங்க யாரும் 'லியோ' பத்தி பேசவேயில்லை. காஷ்மீர் படப்பிடிப்பை ஆரம்பிச்ச பிறகு ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் மாதிரி புரமோஷன் பிளான் பண்ணி விஜய் சார்கிட்ட சொன்னோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புரமோஷன் பண்ணோம். முதல்ல பூஜை வீடியோ, அடுத்த நாள் பிளைட்டு, அடுத்து டீசர் ரிலீஸ் பண்ணது, என ஐந்து நாள் ஐந்து பண்ணோம்,” என பேசியுள்ளார்.

அதாவது, அப்போது விஜய் நடித்து வெளிவர இருந்த 'வாரிசு' படம் வெளிவரும் வரை அவர்களது 'லியோ' படம் பற்றி எதையும் வெளியிட வேண்டாம் என்ற முடிவுதான் அது. ஆனால், இப்போது 'லியோ' வெளிவருவதற்கு முன்பே விஜய் 68 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளது. 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்தும் கூட நாங்கள் அது பற்றி எதுவும் வெளியிடவில்லை என்று சொல்கிறார்.

விஜய் படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் விஜய்யின் அனுமதி இல்லாமல் வெளிவராது. அவரது அனுமதி பெற்றுத்தான் விஜய் 68 அறிவிப்பையும் வெளியிட்டிருப்பார்கள். இருப்பினும் அது 'லியோ' படத்திற்கு ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தனது கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
2023ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ஐந்தாவது படம் ரிலீஸ்2023ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ஐந்தாவது படம் ... அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த நாகார்ஜுனாவும், வாரிசுகளும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

HoneyBee - Chittoir,இந்தியா
26 மே, 2023 - 07:47 Report Abuse
HoneyBee இது கூட ஒரு பிரீ பப்ளிஸிடி .,. அவன் படம் ஓட வைக்க வேண்டும் என்றால் எதையும் செய்வான்... அவனால் ஒரு தலைமுறையே உதவாக்கரை ஆனது தான் மிச்சம். குட்டி கதையுடன் பிரியாணி கொடுத்து படம் ஓட மீட்டிங் நடத்துவான்
Rate this:
26 மே, 2023 - 05:40 Report Abuse
V.Saminatha மகா திருட்டுப் பய விஜய் நடிக்கிற படத்தை பாக்குறதே வேஸ்ட்-அப்பன் ஆத்தா இவர்னு மேணு பேருமே கெட்ட எண்ணமும் மக்களை மடையர்களாகக் காணும் குணம் கொண்டவர்கள்-இவர் படத்தை பாக்கலைன்னா தமிழகம் என்ன அழிந்து விடுமோ?
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
25 மே, 2023 - 15:28 Report Abuse
angbu ganesh அவன் என்ன பெரிய ஆளுன்னு அவனுக்கு இவ்ளோ builtup னு தெரியல. இன்ன என்ன சாதன படைச்சிட்டார். எல்லாமே பொய் மேக்ப்ல இருந்து wig ல இருந்து collection la irundu ellamey poi. appadi irukka avarukku yen ivlo periya scennu theriyala
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
27 மே, 2023 - 10:39Report Abuse
vinuதம்பி நீ கதறுகிறானால் விஜய் வேற லெவெல்க்கு போய் விட்டான் என்று அர்த்தம். நீ விரும்பும் நடிகனை அவன் 5 வருடத்திற்கு முன்பை முந்தி விட்டான். போய் ஓரமா குந்து...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in