நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
கொரோனா தாக்கம் 2020ம் ஆண்டு இந்தியாவில் வந்த போது ஓடிடி தளங்களுக்கான வரவேற்பு அதிகரித்தது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்களை மக்கள் நாடினார்கள். திடீரென அவற்றிற்கு சந்தாதாரர்கள் அதிகமாக அவை கடந்த மூன்று வருடங்களில் நல்ல வளர்ச்சியைப் பெற்றன.
நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5, ஆஹா ஆகிய ஓடிடி தளங்களுக்கிடையே போட்டி அதிகமானது. புதிய படங்கள், வெப் தொடர்கள், நிகழ்ச்சிகள் என சாட்டிலைட் டிவிக்களைப் போல அவர்களும் சில பல கோடிகள் கொடுத்து படங்களை வாங்கவும், தொடர்களைத் தயாரிக்கவும் செய்தார்கள்.
இப்போது அவற்றுடன் ஜியோ சினிமாவும் போட்டியில் இறங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஓடிடி உரிமையை 'ஜியோ சினிமா' பெற்றதன் மூலம் அது பிரபலமானது. அதைத் தொடர்ந்து புதிய படங்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படங்களைப் பேசி வருகிறார்களாம்.
ஹிந்தியில் ஷாகித் கபூர், டயானா பென்ட்ட்டி, சஞ்சய் கபூர் நடித்துள்ள 'பிளடி டாடி' என்ற படத்தை ஜுன் 6ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது ஜியோ சினிமா. தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இப்படி நேரடி வெளியீட்டிற்காக ஆலோசனை நடந்து வருகிறதாம்.