50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை நிராகரித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எப்பவும் எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை தெரிவிக்கும் முன்பு தயவுசெய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .