175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
தற்போது சூர்யா நடித்துள்ள 42வது படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. திஷா பதானி நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு கங்குவா என்று டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா என்றால் என்ன அர்த்தம் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதையடுத்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, கங்குவா என்றால் நெருப்பு ஆற்றல் கொண்ட மனிதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப படக்குழுவும் கங்குவா டைட்டிலின் கீழ் வலிமை மிக்க வீரனின் கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தமிழில் தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் 1984ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கங்குவா என்று தான் டைட்டில் வைத்திருந்தார்கள். அதன் காரணமாகவே ரஜினி பட டைட்டிலை சூர்யா படத்திற்கு வைத்திருக்கிறாரா சிறுத்தை சிவா என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்கின்றன.