Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.ஜ.,விற்கு பிரசாரம் செய்யப் போகும் 'நான் ஈ' சுதீப்?

05 ஏப், 2023 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Kiccha-Sudeep-going-to-campaign-for-BJP?

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் விஜய் நடித்த 'புலி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சுதீப், இன்று பா.ஜ.,வில் இணையப் போவதாக கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பு நிலவியது. கர்நாடகாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் கர்நாடக முதல்வர் பசவராஜ் முன்னிலையில் சுதீப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை நான் ஆதரிக்கிறேன். அவர் எனக்கு மாமா போன்றவர். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்கு பல முறை உதவி செய்துள்ளார். அதற்கு எனது நன்றியுணர்வுதான் இது. அவருக்காக நான் இன்று வந்துள்ளேன், ஆனால் கட்சிக்காக அல்ல. நான் அரசியலில் நுழையவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை,” என்றார்.

சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததாக நேற்று செய்திகள் வெளிவந்தன. அது பற்றி சுதீப் பேசுகையில், “எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது உண்மைதான், அதை யார் அனுப்பியிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். திரையுலகத்திலிருந்துதான் ஒருவர் அதை அனுப்பியிருக்கிறார். அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். எனது கடினமான சூழ்நிலையில் யார் என்னுடன் நின்றார்களோ, அவர்களுக்கு ஆதரவாக நான் செயல்படுவேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு படங்கள் ரிலீஸ் ; மகிழ்ச்சியில் ரம்யா நம்பீசன்அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு ... குலதெய்வ கோவிலில்  நயன்தாரா விக்னேஷ்  வழிபாடு குலதெய்வ கோவிலில் நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06 ஏப், 2023 - 07:46 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "நான் ஈ" வில்லன் பாஜாக்கா கட்சிக்கு பிரச்சாரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in