ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
'இந்தியன் 2' படக்குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் முடிவடைய இருக்கிறதாம். அதன்பின் இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், விஎப்எக்ஸ் வேலைகள் முடிவடைய வேண்டும். 'இந்தியன் 2' படத்தை முழுவதுமாக முடித்த பிறகுதான் 'கேம் சேஞ்சர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு ஷங்கர் செல்ல உள்ளாராம். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்கிறார்கள். இரண்டு படத்துக்குமே பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதனால் தரத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என ஷங்கர் நினைக்கிறாராம்.