புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், உலகம் முழுதும் மேற்கத்திய பாணியிலான கதர் உடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோவில் பங்கேற்க, இத்தாலிக்கு வர்த்தக பயணம் மேற்கொண்டுள்ளார்.
அரசியல், சினிமா என, இரட்டை குதிரையில் சவாரி செய்யும் கமல் 'கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்' என்கிற நிறுவனத்தின் வாயிலாக கதர் ஆடையின் விற்பனையை ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக, நெசவுத்தொழில் மேம்படைய கதர் ஆடைகள் தயாரிப்பிற்கு, கமல் முக்கியத்துவம் அளித்துள்ளார். கதரை உலகம் முழுதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக, மேற்கத்திய பாணியிலான உடை மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை தன் நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகிறார்.
தற்போது 'ஹாலிவுட்' நடிகர், நடிகைகளும் கதர் உடைகளை அணிய வேண்டும் என்பதற்காக, சர்வதேச பேஷன் ஷோவில் பங்கேற்க, கமல் இத்தாலிக்கு கடந்த, 11ம்தேதி திடீரென புறப்பட்டு சென்றார்.
அவர் அங்கு தன் நிறுவனத்தின் வர்த்தக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, வரும், 25ம்தேதி பின் இந்தியா திரும்புகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.