திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் |
மலையாள நடிகர் பஹத் பாசிலின் படங்களில் அவர் சீரியஸாக நடித்தாலும் கூட பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மூலம் நகைச்சுவையை கடத்துவதில் வல்லவர். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் மாலிக், தெலுங்கில் புஷ்பா, தமிழில் விக்ரம் என தொடர்ந்து அவர் சீரியஸான கதை அம்சம் கொண்ட மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சற்று ரிலாக்ஸாக மீண்டும் தனது நகைச்சுவை முகத்தை ரசிகர்களுக்கு காட்ட தயாராகி வருகிறார் பஹத் பாசில்.
மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து வந்த ‛பாச்சுவும் அற்புத விளக்கும்' என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன்களில் ஒருவரான அகில் சத்யன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நூறு சதவீதம் காமெடிக்கு உத்தரவாதம் தரும் படமாக இது இருக்கும் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.