அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் | ஆஸ்கர் வென்ற 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை கவுரவித்த சிரஞ்சீவி |
பிரின்ஸ் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் மாவீரன். இந்த படத்தில் அவர் கார்ட்டூனிஸ்ட்டாக நடிக்க, அதிதி ஷங்கர் பத்திரிகையாளராக நடிக்கிறார். கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ என அனைத்தும் வியாபாரமாகி விட்ட நிலையில் சமீபத்தில் சீன் ஆ சீன் ஆ என்ற முதல் சிங்கிள் பாடலும் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டபடிப்பு தற்போது புதுச்சேரியில்நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாத இறுதியோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து மாவீரன் படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.