உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் | விவாகரத்து செய்த மனைவிகள் பற்றி ஒருபோதும் தவறாக பேசியது இல்லை ; நடிகர் முகேஷ் | நள்ளிரவு 12.30 மணிக்கே சலார் முதல் காட்சியை துவங்கும் கேரளா திரையரங்குகள் | 'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… |
8 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த படம் ஐ. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தை புதுச்சேரி மாநிலத்தில் விநியோகம் செய்ய ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசிடம் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு அரசு மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து விநியோக நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் “திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனாலும் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பதுதான் சட்டம். அதைத்தான் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும், தமிழில் பெயர் வைத்ததற்காகவே வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வழக்கும், தள்ளுபடியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.