Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நிச்சயதார்த்தம் செய்த காதலியுடன் துப்பாக்கி வில்லன் பிரிவா?

18 மார், 2023 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Did-Vidyut-jamwal---Nandita-mahtani-break-up?

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். தொடர்ந்து பில்லா-2 படத்தில் அஜித்துடனும் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடிதிருந்தார். மேலும் பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது 42 வயதாகும் வித்யுத் ஜாம்வால், பிரபல பேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து வந்தார்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நந்திதாவுடன் எளிமையான முறையில் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.. தாஜ்மஹால் பின்னணியில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அப்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தின. இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என ஒரு செய்தி கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாலிவுட் பிரபலம் ஒருவரது வீட்டு திருமண நிகழ்வில் இருவரும் தனித்தனியாக கலந்துகொண்டதும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாததும் அதை உறுதிப்படுவது போல இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றும் நந்திதா மதானி ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிவாங்கிக்கு சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் அனுமதிசிவாங்கிக்கு சிறுநீரக கோளாறு: ... சினிமாவாகிறது ஜாக்குலின் - சுகேஷ் காதல் கதை சினிமாவாகிறது ஜாக்குலின் - சுகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Paraman - Madras,யூ.எஸ்.ஏ
20 மார், 2023 - 13:56 Report Abuse
Paraman அட கருமம் பிடிச்சவங்களா?? அந்த தாஜ்மகால் உடல் புதைக்கப்பட்ட ஒரு சமாதி. அந்த இடத்தில போயி உங்கள் காதல் வாழ்க்கையை படம் எடுத்துக்கொண்டால் இந்த சீரழிவு கண்டிப்பாக நடந்தே தீரும். எந்த கேன பயலாவது சுடுகாட்டுல போயி தன திருமணவாழ்க்கைக்கு நிச்சியார்தம் செய்வானா அது போல தான் இது எப்போடா புரிந்து கொள்ள போகுறீர்கள் ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in