175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரில் குறிப்பிட வேண்டியவர்கள் அஜய் தேவகன், கஜோல். இவர்களுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் இருக்கிறார்கள். 20 வயதை அடுத்த மாதம் கடக்க உள்ள நைசாவின் சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் இணையத்தில் வைரலாகி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளன.
அந்தப் புகைப்படங்களில் அப்படியே அம்மா கஜோல் போலவே இருக்கிறார். நைசா புகைப்படத்தையும், கஜோல் புகைப்படத்தையும் பகிர்ந்து அம்மாவைப் போலவே மகளும் அழகு என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். நைசாவின் பல கிளாமர் புகைப்படங்கள் ஏற்கெனவே இணையங்களில் சர்ச்சை கலந்த வரவேற்பைப் பெற்றவை.
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதியரின் வாரிசு, நடிகர், நடிகைகளின் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. அந்த வரிசையில் விரைவில் நைசாவும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜய் தேவகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'கைதி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'போலா' இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது.