பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அப்படத்தை தயாரிக்க உள்ளது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்றைய அறிவிப்பு பற்றி நேற்றே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது 6வது தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்கள். இது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படமா அல்லது தயாரிக்கும் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரியும்.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான்.