அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

கடந்த வருடத்தில் ஆச்சார்யா, காட்பாதர், இந்த வருட துவக்கத்தில் வால்டர் வீரய்யா என இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து தனது படங்களை வெளியிட்டு வருகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து அவர் தற்போது போலா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அஜித் நடித்து வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் ரீமேக்காக தான் இந்த படம் உருவாகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னாவும் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும்ஷ் நடிக்கின்றனர். தற்போது ஹைதராபாத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் சீனியர் இயக்குனரான கே.ராகவேந்திரா ராவ், போலா சங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார். படம் பற்றிய விவரங்களை கேட்டறிந்த அவர் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்தார். கடந்த 40 வருடங்களில் சிரஞ்சீவி நடித்த பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே.ராகவேந்திரா ராவ் சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரும் கூட. இவரது விஜயத்தை புகைப்படத்துடன் போலா சங்கர் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.