அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

கடந்த 2021ல் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கும் துணை நடிகரான மகா காந்தி என்பவருக்கும் வார்த்தை தகராறு ஏற்பட்டு அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது தன்னை தாக்கியதாக வழக்கு தொடுத்ததுடன் தனக்கு அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார். ஆனால் விஜய்சேதுபதியோ, லாப நோக்கில் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு எதிர்மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து விசாரணையில் சம்பவம் பெங்களூரில் நடைபெற்றதால் இங்கே விசாரிக்க முடியாது எனக்கூறி சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனாலும் அடுத்ததாக மகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து மீண்டும் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விஜய் சேதுபதி, மகா காந்தி இருவருமே நீதிமன்ற கவுன்சில் மூலமாக பரஸ்பரம் தங்களுக்குள் பேசி சமரசம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், வரும் மார்ச் 2ம் தேதி வழக்கு விசாரணையின்போது இரண்டு பேருமே வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கவுன்சிலிங் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.