Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம்

03 பிப், 2023 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Has-Pandiraj-left-cinema?:-Intensity-in-agriculture

பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாண்டிராஜ். அதன் பிறகு வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி உள்பட பல படங்களை இயக்கினார். கடைகுட்டி சிங்கம்தான் அவர் கடைசியாக கொடுத்த வெற்றிப் படம். அதன் பிறகு அவர் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது கையில் படம் எதுவும் இல்லாத பாண்டிராஜ் தனது சொந்த ஊரான திருமயத்தில் முழுநேர விவசாயி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்று முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது.

எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனது பெற்றோர் வாழ்ந்த நிலம் பாழாய் இருந்தது. அங்கே மது அருந்திவிட்டு பாட்டில் போட்டு செல்கிறார்கள், சாராயம் காய்ச்சுகிறார்கள். அதனால் நான் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கினேன். நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி இல்லை, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது.

இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி.

இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். எனது மனைவி அறுவடை செய்யும் வரை ஆனா செலவை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தார். நெல் விற்று பணத்தை கணக்கிட்டு இந்த வருடம் நமக்கு லாபம் என்று கூறினார். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜிநானாக பட்டம் போட்டுக் கொள்ள ... சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

KayD - Mississauga,கனடா
08 பிப், 2023 - 01:29 Report Abuse
KayD படம் எடுத்து கோடி ல புரள நினைத்து ஒன்னும் தேறாமல் கோமணம் கட்டிட்டு களத்தில் இறங்குவோம் னு நினைத்து விட்டார் போல... நீங்க விவசாயம் பண்ணுங்க.. அது உங்கள் டிரெக்ஷன் விட கடினம். மனசில் இருந்தா தான் மண்ணிலும் pon விளையும்.சும்மா ஸ்டண்ட் அடிச்சிட்டு சாயம் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04 பிப், 2023 - 04:23 Report Abuse
NicoleThomson ஜீன்ஸ் போட்டு சேற்றில் வேலை செய்வது போல போட்டோவுக்கு போஸ் கொடுப்பவனெல்லா விவசாயி ஆக முடியாது , இது ஒன்றும் சினிமா துறை இல்லை . நிஜம் சார்ந்த துறை ,உண்மையா இருங்க வெற்றிமாறன்
Rate this:
03 பிப், 2023 - 18:12 Report Abuse
எஸ் ரவி ரொம்ப சந்தோஷம். விவசாயி விவசாயம் என்று படத்தில் மட்டுமே கூப்பாடு போடாமல் நிஜத்தில் விவசாயம் செய்து லாபம் பார்த்ததற்கு பாராட்டுக்கள். திரையில் வாயால் வடை சுடும் சினிமாக்காரர்கள் பாண்டிராஜ் போன்று சினிமாவை விட்டு விலகி முழு நேர விவசாயி ஆக வேண்டும். அப்போது தான் சினிமாவும் சுத்தமாகும். விவசாயமும் செழிக்கும். முதலில் கார்த்தி இந்த லிஸ்டில் இணைவார் என்று நம்புவோம்.
Rate this:
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
03 பிப், 2023 - 16:57 Report Abuse
Krishna Awesome Pandiraj. Great respect
Rate this:
Oru Indiyan - Chennai,இந்தியா
03 பிப், 2023 - 16:06 Report Abuse
Oru Indiyan ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். பாண்டிராஜ் தமிழ்நாட்டின் நம்ம ஆளு என்று எல்லோரும் கொண்டாடுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in