இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் |
கடந்த, 1984ல் தாயம் என்ற கதையை மையமாக வைத்து ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல்ஹாசன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார் கமல். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும். மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், சரத்பாபு, அனுஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் ஆளவந்தான் படத்தை தாணு விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் . உலகம் உழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.