நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி |
பிக்பாஸ் சீசன் 6-ல் மூன்றாவது இடத்தை பிடித்தவர் ஷிவின் கணேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாரிடமும் பேசாமல் இருந்த ஷிவின், நமீதா மாரிமுத்து போல் விரைவில் வெளியேறிவிடுவார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், போகப்போக தனக்கு கிடைத்த வாய்ப்பின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி இன்று ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்திற்கும் வெளிச்சத்தை கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருக்கும் பல கோடி மக்கள் ஷிவினை தங்கள் சகோதரியாகவும் மகளாகவும் நேசிக்கும் அளவிற்கு அவர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய ஷிவினை, ரச்சிதா மற்றும் நண்பர்கள் செண்டை மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் மக்கள் பலரும் ஷிவினுக்கு கைகுலுக்கி வாழ்த்துகள் கூறி ஆட்டோகிராப் வாங்கி சென்றனர். இதன் வீடியோவை ஷிவின் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.