Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுத்த 'அக்கினேனி' குடும்பம்

24 ஜன, 2023 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Akkineni-family-reply-to-Balakrishna

தெலுங்குத் திரையுலகத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், என்டி ராமராவ் ஆகியோர் பல சாதனைகளைப் புரிந்தவர்கள். அவர்களது காலம்தான் தெலுங்கு சினிமாவின் பொற்காலமாக இருந்தது. அவர்களது வாரிசுகள் இப்போதும் தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

என்டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'வீரசிம்ஹா ரெட்டி'. அந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா பேசிய போது, “அக்னினேனி, தொக்கினேனி…..அஅ ரங்காராவ், ஈஈ ரங்கா ராவ்” என அக்கினேனி நாகேஸ்வரராவ் பற்றியும், குணச்சித்திர நடிகரான எஸ்வி ரங்காராவ் பற்றியும் கிண்டலான முறையில் பேசினார்.

அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சை போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் நாகேஸ்வரராவின் பேரன்களும், நாகார்ஜுனாவின் மகன்களாக நடிகர்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோரும் இருவரும் தனித்தனியாக ஒரே விதமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “நந்தமூரி தாரக ராமராவ் காரு (என்டிஆர்), அக்கினேனி நாகேஸ்வரராவ் காரு, மற்றும் எஸ்வி ரங்கா ராவ் காரு ஆகியோர் தெலுங்கு சினிமாவின் தூண்களாகவும், பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள். அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்போதுமே போட்டி உண்டு. இருவரும் நட்பாகவும் பழகிக் கொள்ள மாட்டார்கள் என்பது தெலுங்குத் திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான், அவரது மகன்களான நாக சைதன்யா, அகில் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அன்றைய சக்சஸ் மீட்டின் போது பாலகிருஷ்ணா பேச்சில் நிறைய 'தடுமாற்றம்' இருந்ததாக நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கமெண்ட்டாக உள்ளது. அவரது பேச்சிற்கு அக்கினேனி குடும்பத்திலிருந்து பதிலடி வந்துள்ளதால் இந்த விவகாரம் இத்துடன் அடங்குமா மீண்டும் பாலகிருஷ்ணா தரப்பிலிருந்து வேறு அறிக்கை வருமா என்பது இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் -  ஆர்.வி.உதயகுமார்ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் ... மோகன்லால் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்ஹாசன் - ஜீவா மோகன்லால் படத்தில் கெஸ்ட் ரோலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25 ஜன, 2023 - 08:02 Report Abuse
NicoleThomson அன்று பாலகிருஷ்ணா குடித்து விட்டு பேசியது போலத்தான் இருந்தது . ஒருவேளை அவனும் தெலங்கானாவில் கடற்கரை இருந்தால் அவனும் துணைவி முனைவு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in