விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் |
சின்னத்திரையில் அசத்தி வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து லிப்ட் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் இப்போது ‛டாடா' என்ற படத்தில் நடித்துள்ளார். அபர்ணாதாஸ் நாயகியாக நடித்துள்ளார். பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு படத்தினை இயக்கி உள்ளார். ஜென் மார்டினின் பெப்பியான இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிப்., 10ல் தியேட்டர்களில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.