சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இப்படம் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவில்லை. என்றாலும் நேரடியாக பல பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் விண்ணப்பிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு பிரிவுகளில் இப்படம் விருக்கான போட்டியில் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது, சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது ஆகிய பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகலாம் என்கிறார்கள். இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு விருதுக்குத் தேர்வாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' எதில் தேர்வாகும் என தெலுங்குத் திரையுலகினர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ஏற்கெனவே வென்றுள்ளது.