Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம்!

23 ஜன, 2023 - 00:16 IST
எழுத்தின் அளவு:
Bigg-Boss-Season-6-Title-Winner-Azeem

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ‛க்ராண்ட் ஃபினாலே' இன்று (ஜனவரி, 22) நடைபெற்றது. இறுதிபோட்டியாளர்களான அசீம், ஷிவின், விக்ரமன் ஆகிய மூவரில் யார் வின்னர் என்று உலகெங்கிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இறுதிநாளான இன்று ஷிவின் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், வெல்லப்போவது விக்ரமனா? அசீமா? என பரபரப்பான இறுதிக்கட்டம் ரசிகர்களின் ஹார்ட்பீட்டை எகிறச் செய்தது. ஒருவழியாக வின்னர் அசீம் தான் என்பதை கையை தூக்கிபிடித்து கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து வெற்றியாளரான அசீமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் நவீன சொகுசு வகை காரான ப்ரீசா காரும் வழங்கப்பட்டது.
டைட்டில் கோப்பையை கையில் வாங்கிய அசீம், 'எனது வெற்றி இறைவனுக்கு. எனக்கு சிறுவயதிலிருந்தே நல்லதை மட்டுமே சொல்லி வளர்த்த பெற்றோருக்கு நன்றி' எனக்கூறினார்.
மேலும், அசீமை பற்றி முதல்வாரத்திலிருந்தே நெகட்டிவாக பல கமெண்டுகள் வந்த நிலையில், '11 வாரமும் என்னை நாமினேட் செய்யுங்கள். மக்களின் ஆதரவுடன் நான் ஜெயித்துக்காட்டுவேன்' என்று கூறியிருந்தார். அதை குறிப்பிட்டு 'இதோ ரிசல்ட்' என கெத்தாக பிக்பாஸ் கோப்பையை தூக்கிக்காட்டினார்.
அசீமின் வெற்றிக்கு சக ஹவுஸ்மேட்டுகள் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா?பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ... பிக்பாஸில் ஷிவினில் தோல்விக்கு ரசிகர்களே காரணம் : கமல்ஹாசன் பிக்பாஸில் ஷிவினில் தோல்விக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 ஜன, 2023 - 11:54 Report Abuse
Yaro Oruvan இவன் ஒரு லவுடு ஸ்பீக்கர்.. கத்தி கத்தி சாவடிப்பான்.. விக்ரமன ஒத்துக்கலாம்.. ஆனா நம்ம ஹீரோ குருமா ஒட்டு கேக்குறேன் பேர்வழின்னு விக்ரம சோலிய முடிச்சிட்டான்.. இவனுவ ரெண்டு பேரோட ஒப்பிட்டு பார்த்தால் ஷிவின் ஜெயித்திருக்கலாம்.. ஒரு முன்னுதாரணமா இருந்திருக்கும்.. இப்ப லவுடு ஸ்பீக்கருக்கு கொடுத்து தவறான முன்னுதாரணமாக்கி அதன் மூலம் பலரை பேச வைத்து அதை வியாபாரம் ஆக்கீட்டானுவ விஜய் டிவி க்காரனுவ .. எவன் எக்கேடு கெட்டா என்ன .. நமக்கு காசு யாவாரம்..அவனுவ பொழப்பு ஜாலி..
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
23 ஜன, 2023 - 17:42 Report Abuse
R S BALA சே.. விக்ரம்தான் ஜெயிச்சிருக்கணும் நல்ல பையன் அவன்.. இந்த ஆசிம் ஒரு வெத்து தறுதலை...
Rate this:
Muga Kannadi - chennai,இந்தியா
23 ஜன, 2023 - 16:15 Report Abuse
Muga Kannadi அனேகமாக இன்னும் ஒரு வருடத்தில் இந்த பிஇக்பாஸ் சாயம் வெளுத்துவிடும். இம்மாதிரி கேடுகெட்ட ஜென்மங்கள் டைட்டில் வின் பண்ண முடிகிறது...
Rate this:
VENKATESAN - Singapore,சிங்கப்பூர்
23 ஜன, 2023 - 08:07 Report Abuse
VENKATESAN விக்ரமனுக்கு வாக்களியுங்கள் என்று திரு சொல்லி வீடியோ வெளியிடாமல் இருந்திருந்தால், விக்ரமன் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த கட்சி தலைவர் தொண்டர்களுக்கு எந்த காலத்தில் நல்லது செய்திருக்கிறார்?
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
23 ஜன, 2023 - 07:32 Report Abuse
RAJ A bad example to the tamil community. A guy who spoke rubbish is a title winner. He hehe. Shame..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in