ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் போன்ற படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் பார்த்திபன். இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு புத்தகத்தை விரித்து வைத்து அதில் மயிலிறகு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இதற்குள் அடங்கியுள்ள டைட்டிலை கெஸ் பண்ணுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள் இருக்கும் திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடிங்கள் பார்க்கலாம். என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் பார்த்திபன்.
அதையடுத்து, புத்தகத்தின் 53ம் பக்கத்தில் மயிலிறகு இருப்பதால் , 53ஆம் பக்கம் என்று சிலர் கூறியிருப்பதோடு, புத்தகத்தில் ஒரு மயிலிறகு என்று பலரும் தங்களுக்கு தோன்றிய தலைப்புகளை யூகித்து பதிவு செய்துள்ளார்கள் . அதைத்தொடர்ந்து பார்த்திபன் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், என் தலைப்புக்கு பக்கம் பக்கமாய் மிகப் பக்கமாய் 51 ஆம் பக்கம், 52 ஆம் பக்கம், 53 ஆம் பக்கம் என நெருங்கிவிட்ட தலைப்புகள். ஆனால் கதைக்குள் பொருத்தி நான் நிறுத்திய தலைப்புடன் உங்களின் யூகம் பொருந்துகிறதா என்று பார்த்துவிட்டு நாளை எனதை அறிவிப்பேன். அதுவரை உங்களின் அறிவுத்திறனை ஆராதிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
அது மட்டுமின்றி என் தலைப்பை யூகிக்கும் ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருப்பதற்கு சிலர், புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கொள்ளவா முடியும் என்று கடுப்படித்திருந்தார்கள். அவர்களுக்கு பார்த்திபன், கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு, கட்டிக்கிட்டவர்களுக்கு கொடுங்க. இல்ல கட்டிக்க போறவங்களுக்கு குடுங்க என்று பதில் கொடுத்து இருக்கிறார்.