Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயிர்பலி, தேவையற்ற மோதல்கள்... : அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்குமா அரசு? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

12 ஜன, 2023 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Will-the-government-ban-the-midnight-and-early-morning-shows?

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் அதிகாலை காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாலை 4 மணிக்கு, 5 மணிக்கு அந்த காட்சிகள் ரசிகர்களுக்கான காட்சிகள் என்ற பெயரில் 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணங்களை வசூலித்து நடத்தப்படுகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன.



மோதல் சம்பவம்
சில சமயங்களில் அதிகாலை காட்சிகளுக்கு பதிலாக நள்ளிரவு காட்சிகளும் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்த 'துணிவு' படத்தின் காட்சி நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணிக்கு விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் காட்சி நடைபெற்றது. நேற்றைய அதிகாலை காட்சிகளில் இருவரது ரசிகர்களுக்கும் இடையில் பல மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு தியேட்டரில் இரு ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்னையாக மாறியது. தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பேனர்கள், கட்-அவுட்டுகள் கிழிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் அந்த நேரங்களில் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை, அப்படிப்பட்ட ரசிகர்களின் தேவையற்ற மோதலைத் தவிர்க்க நேற்று அதிக அளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு தொடர்புடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இரண்டு படங்களையும் வெளியிடுவதால்தான் இப்படியான நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அவர்கள் வெளியிடாத படங்களுக்கு இப்படியான காட்சிகளை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இருக்கிறது என்கிறார்கள்.



உயிர் பலி
நேற்றைய ரசிகர் கொண்டாட்டங்களின் உச்சமாக சென்னையைச் சேர்ந்த 19 வயதே ஆன இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞரின் உறவினர்களும், நண்பர்களும் பேசியதைப் பார்க்கும் போது அவ்வளவு வருத்தம் வந்தாலும் மற்றொரு பக்கம் கோபமும் வருகிறது.

கண்டு கொள்ளாத நடிகர்கள்
நேற்று ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை வேண்டுமென்றே வெளியிட்டு ஏட்டிக்குப் போட்டியாக இப்படி ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை அரங்கேற்ற இரு நடிகர்களுக்குமே மறைமுகமான பங்கு உண்டு. நேற்று உயிரிழந்து ரசிகருக்காக சம்பந்தப்பட்ட நடிகர் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. தங்களது அபிமான நடிகர்களை தங்களது பெற்றோர்களை விடவும் கொண்டாடும் இளைஞர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது சினிமா மோகம் இருக்கிறது.



சினிமா தியேட்டர்களின் வேலை நேரங்களாக காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. இப்படி நள்ளிரவு, அதிகாலை காட்சிகளில் தங்களது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கொண்டாட்டம் செய்யும் போது உடல் சோர்வு காரணமாக விபத்துக்களும், ஏன் உயிரிழப்புகளும் நடக்கவும் வாய்ப்புள்ளது என டாக்டர்களும் தெரிவிக்கிறார்கள். அப்படி ஒரு உயிரிழப்பு சம்பவம்தான் நேற்று நடந்துள்ளது.



தடை வருமா
சினிமா ஹீரோக்கள் அவர்களது ரசிகர்களுக்கு தகுந்த அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று நேற்று இறந்த இளைஞரின் சித்தி மற்றும் நண்பர்கள் பேசிய வீடியோவை சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் பார்த்திருந்தால் இனிமேலாவது தங்களது படங்களுக்கு அதிகாலை காட்சிகள் வேண்டாம் என்று சொல்வார்கள்.

பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இப்படிப்பட்ட நள்ளிரவு, அதிகாலை காட்சிகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. தமிழக அரசு இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மீண்டும் ஒரு உயிர்ப்பலி நடக்காமல் தடுக்குமா என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு, துணிவு - ஆரம்பமானது 'நம்பர் கேம்' சண்டைவாரிசு, துணிவு - ஆரம்பமானது 'நம்பர் ... இன்று ஐதராபாத்தில் 'வாரசுடு' பிரஸ்மீட், விஜய் போவாரா ? இன்று ஐதராபாத்தில் 'வாரசுடு' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

k.sarthar - Tamilnadu Ramanathapuram,இந்தியா
13 ஜன, 2023 - 10:57 Report Abuse
k.sarthar இந்த அரசுக்கு மக்களின் உயிர் தூசிக்கு சமம் அவர்களுக்கு பொட்டி ரொம்பனும் நடிகர்கள் மீது உள்ள ஒரு வித காமம் போகும்வரை தமிழ்நாடு என்றும் மாறாது
Rate this:
lana -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜன, 2023 - 10:34 Report Abuse
lana எல்லாவற்றுக்கும் corporates பிசினஸ் தான் காரணம். ஒரு காலத்தில் ஒரே நாளில் 7 முதல் 10 படம் ரிலீஸ் செய்ய பட்டது. எந்த பெரிய பிரச்சினை எழுந்தது இல்லை. இன்று ஒரு படம் ரிலீஸ் ஆகும் போதே இன்னொரு படம் ரிலீஸ் ஆகாது அந்த அளவுக்கு பிசினஸ் மாறி விட்டது. படம் நல்லா இல்லை என்றால் உம் கூட தேவை அற்ற சர்ச்சை களை ஏற்படுத்தி முதல் ஒரு வாரத்திற்கு அனைவரையும் கொள்ளை காசை பிடுங்கி படம் பார்க்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் ஓடாது என்று அவர்களுக்கே தெரியும். இதில் இந்த நடிகர்கள் ஊருக்கு புத்திமதி சொல்வது. 5 ருபாய் வாங்கி வைத்தியம் பாக்கணும் என்று. 5 ருபாய் வாங்கி அவன் எப்படி 3000 காசு கொடுத்து tickets வாங்குவது. இதில் பிறருக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று சொல்றது. மக்கள் திருந்தட்டும். பின்னர் எல்லாம் மாறும். அது வரை இந்த கூத்தாடிகள் கூட்டம் கொண்டாட்டம் போடும்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13 ஜன, 2023 - 07:00 Report Abuse
Natarajan Ramanathan கேவலம் ஒரு திரையரங்கில் வெறிபிடித்த ரசிக குஞ்சுகள் அராஜகம் செய்வதை கூட கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற சுடலை அரசின் காவல்துறை செயலிழந்துள்ளது.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13 ஜன, 2023 - 05:51 Report Abuse
Mani . V அதெல்லாம் முடியாது. திரையுலம் அனைத்தையும் ரெட் ஜெயண்ட் என்னும் ஆக்டோபஸ் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால் அதிகாலை காட்சியை எல்லாம் ரத்து செய்ய முடியாது - எத்தனை உயிர் பலி ஏற்பட்டாலும்.
Rate this:
13 ஜன, 2023 - 05:50 Report Abuse
V.Saminathan இதுபோன்ற ஒரு கூத்தாடி எம் ஜி ஆரின் செல்வாக்கில் பதவி அடைந்ததே திருடர்கள் முன்டேற்ற கழகம்-அடுத்த அயோக்கியன் கமல் பதவி பெறத்துடிக்கிறான்-இனி ரசிகக் குஞ்சு எனும் பெயரில் உண்மை நிலையை படமாக்கி காண்பித்தால் தமிழக மாணவர்கள் இளைஞர்கள் திருந்துவரோ என்னவோ? முதலில் ரசிகர் மன்றங்கள் குடியிருப்போர் தலச்சங்கங்களை பதிவு செய்யாதிருப்பதே நல்லது-இவை சமூகத்துக்கு பேரழிவையே உண்டாக்குகின்றன. ஸயன்ஸ் கிளப் அதற்கு நலழல முன்னுதாரணம் - பல கறுப்புப் பண பேர்வழிகள் லயன்ஸ் க்ளப்பில் சேர்ந்தை கோமகனென தம்மை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர்-இப்பொது லயன்ஸ் க்ளப்பை எவரும் மதிப்பதில்லை-தவிர வித்தவுட்.டிக்கட் பரம்பரை ஆட்சியில் மக்களை முட்ட வைத்து காசு பார்க்கும் வேலையே நடைபெறும்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in