அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுக்குப் பிறகு விக்ரம், ராக்கெட்ரி போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதையடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தவர், முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு கதையில் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் இருந்து விலகினார். அதை அடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
மேலும் இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வாடிவாசல் படத்திற்கு சூர்யா ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்த நிலையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தொடங்கியதால் அந்த கால் சீட்டை சிறுத்தை சிவாவுக்கு கொடுத்து தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இப்படியான நிலையில்தான் தற்போது வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனபோதிலும் இந்த செய்தியை வாடிவாசல் படக்குழுவினர் மறுக்கிறார்கள். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தை தொடங்க போகிறார். அதனால் இப்படம் ட்ராப் ஆகி விட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்கிறார்கள்.