அண்ணன் ஆக பார்த்தேன்... : மாஸ்டர் மகேந்திரன் வேதனை | கோடையில் ரிலீஸிற்கு தயாராகும் ‛ஒன்ஸ்மோர்' | எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் |

வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றுதான் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் வெளியாகும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள லைக்கா நிறுவனம் அமெரிக்கா, யுகே நாடுகளில் 'துணிவு' படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை போஸ்டருடன் டுவீட் செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் குறிப்பிட்ட தினத்தில் காலையில் வெளியானால், அமெரிக்க நேரப்படி ஒரு நாள் முன்னதாக அங்கு வெளியாகும். அப்படிப் பார்த்தால் ஜனவரி 12ம் தேதியன்று இந்தியாவில் 'துணிவு' வெளியாகும் எனத் தெரிகிறது.
தேதியுடன் கூடிய இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அமெரிக்கா, யுகே வெளியீடு பற்றிய அறிவிப்பு முதலில் வெளியாகியுள்ளது. அது போலவே விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'வாரிசு' படம் அமெரிக்காவில் ஜனவரி 12 வெளியாகும் என அதன் அமெரிக்க வினியோகஸ்தர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இரண்டு படங்களின் வெளிநாட்டு வெளியீட்டுத் தேதிப்படி பார்த்தால் 'துணிவு' படம் ஜனவரி 12ம் தேதியும், 'வாரிசு' படம் ஜனவரி 13ம் தேதியும் தமிழகத்தில் வெளியாகலாம்.




